கோவை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் 41 போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் சிக்கினார்
கோவை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் 41 போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் சிக்கினார்
கோவை
கோவை விமான நிலையத்தில் அயன் பட பாணியில் 41 போதை மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பெண் சிக்கினார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உகாண்டா பெண்
வளைகுடா நாடான சார்ஜா- கோவை இடையே ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் சார ்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று சோதனை நடத்தப் பட்டது.
இதில், அந்த பெண்ணின் ஏதோ மர்ம பொருளை விழுங்கி வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
போதை மாத்திரை
இதைத்தொடர்ந்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அந்த பெண்ணை டாக்டர்கள் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பெண்ணின் வயிற்றுக்குள் மாத்திரைகள் வடிவில் ஏதோ பொருள் இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த பொருட்க ளை வெளியே எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த 41 மாத்திரைகள் வெளியே எடுக்கப்பட்டது.
அவற்றை ஆய்வு செய்த போது, அதிக விலை கொண்ட போதைப்பொருட்கள் என்பதும், அந்த பெண், போதைப்பொருட்களை மாத்திரை வடிவில் ஆக்கி விழுங்கி வயிற்றுக்குள் மறைத்து கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
அயன் பட பாணியில்
நடிகர் சூர்யா நடித்த அயன் படத்தில் போதைப் பொருட்களை மாத்திரை வடிவில் மாற்றி கடத்தி வரும் காட்சி இடம் பெற்று இருக்கும்.
அந்த சினிமா பட பாணியில் உகாண்டா நாட்டு பெண் போதைப்பொருளை விழுங்கி கோவைக்கு கடத்தி வந்துள்ளார்.
தற்போது உகாண்டா நாட்டு பெண்ணை மருத்துவ கண்காணிப் பில் உள்ளார். சிகிச்சைக்கு பிறகு உகாண்டா நாட்டு பெண் கைது செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்டது என்ன வகை போதைப்பொருள் என்பது தெரியவில்லை.
எனவே அதை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். அதன்முடிவில் தான் அது என்ன போதைப் பொருள் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.