வையகளத்தூர் மேம்பாலத்தில் சாலை சீரமைக்கப்படுமா?

நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் மேம்பாலத்தில் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-05-07 13:33 GMT
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் மேம்பாலத்தில் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 
வையகளத்தூர் மேம்பாலம்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்- திருவாரூர் சாலையில் வையகளத்தூர் ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந் தேதி   அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. 
சீரமைக்க கோரிக்கை 
இந்த பாலத்தின் மையபகுதியில் வட்டவடிவில் தார் மற்றும் கான்கிரீட் பெயர்ந்துள்ளது. இதனால் இந்த பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த இடையூைற சந்திக்கின்றன. மேம்பாலம் கட்டப்பட்ட 3 வருடங்களில் பாலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பழுதால் வாகன ஓட்டிகள் இந்த பாலத்தில் வாகனங்களை சிரமத்துடன் இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வையகளத்தூர் மேம்பாலத்தில் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்