ஊருணியில் மூழ்கி கொத்தனார் பலி

ஊருணியில் மூழ்கி கொத்தனார் பலியானார்.

Update: 2022-05-07 12:54 GMT
ராமநாதபுரம், 
திருப்புல்லாணி அருகே உள்ளது மணியக்காரன்வலசை. இந்த ஊரைச் சேர்ந்தவர் உடையநாயகம் (வயது55). கொத்தனார் வேலைபார்த்து வந்தார். இவர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியில் சென்று வருவதாக கூறி சென்றாராம். நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் கூனங்குளம் ஊருணியில் மூழ்கி இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஊருணியில் இறந்த நிலையில் உடையநாயகம் கிடந்துள்ளார். ் குளிக்க சென்றபோது சக்தியில் சிக்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து அவரின் மனைவி கிருஷ்ணவேணி (50) அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்