அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஷூ’க்களை மட்டும் திருடும் கொள்ளையன் - பல்லாவரம் வாரச்சந்தையில் புதுப்பித்து விற்பனை
அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘ஷூ’க்களை மட்டும் திருடும் கொள்ளையன் அதனை புதுப்பித்து புது ‘ஷூ’க்கள் என பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது.
ஆலந்தூர்,
சென்னை கிண்டி, வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘ஷூ’க்களை மட்டும் குறி வைத்து திருடும் நூதன கொள்ளையன் கண்காணிப்பு கேமராவில் சிக்கி உள்ளான். கையில் கோணிப்பையுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு செல்லும் அவன், அங்கிருந்த ‘ஷூ’க்களை திருடி விட்டு, மற்றொரு வீட்டில் திருட செல்லும்போது நாய் குரைத்ததால், அங்கு ‘ஷூ’க்களை திருட முடியாமல் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இது பற்றி கிண்டி போலீசார் நடத்திய விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து இரவு நேரங்களில் கோணிப்பையுடன் செல்லும் கொள்ளையன், வீடுவீடாக சென்று வீட்டின் வெளியே உள்ள ‘ஷூ’க்களை மட்டும் திருடி, அதனை புதுப்பித்து புது ‘ஷூ’க்கள் என பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது.