ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள்

ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள்

Update: 2022-05-07 10:58 GMT
ரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள்
திருப்பூர் என்றாலே போக்குவரத்து ெநருக்கடிதான். எந்த சாலையை எடுத்தாலும் வாகனங்கள் அணி வகுத்து செல்லும். எனவே  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க  சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளன.  ஆனால் அதை சில வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்வது இல்லை. ஒரு வழிப்பாதையில் வாகனத்தை இயக்குகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது போன்ற வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்க வேண்டும்.
நாய்களால் விபத்து அதிகரிப்பு
திருப்பூரில் திரும்பிய பக்கம் எல்லாம் குறைந்த பட்சம்  10 நாய்கள் கூட்டமாக சுற்றித்திரியும். அதுவும் குப்கைகள் கொட்டப்படும் இடத்தில் அவை பண்ணும் சேட்டைக்கு அளவே இல்லை. மற்ற நாய்களுடன் கொஞ்சி குலாவும்போதும், வேறு தெருநாய்களை கண்டால் ஆக்ரோஷமாக குரைத்து பாய்ந்து சென்று கடிப்பது மட்டுமல்ல அவை வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது.  தனியாக செல்லும் யாரையும் நாய்கள் விட்டுவைப்பது இல்லை.அவை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படு்த்த வேண்டும்.

மேலும் செய்திகள்