முத்தூர் வெள்ளகோவில் இடையே டவுன்பஸ் சேவை
முத்தூர் வெள்ளகோவில் இடையே டவுன்பஸ் சேவை
முத்தூரில் இருந்து மங்களபட்டி, நாட்ராயன்கோவில், சக்தி பாளையம், கே.வி.பழனிச்சாமி நகர், ஒத்தக்கடை வழியாக வெள்ளகோவிலுக்கு தடம் எண் வி 5 எண் அரசு டவுன்பஸ் இயக்கப்பட்டு வந்தன. அப்போது தனியார் மினி பஸ்சும் இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ் சேவையின் மூலம் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர். மினிபஸ் ஓடியதால் அரசு டவுன்பஸ் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மினி பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது. அரசு டவுன் பஸ் சேவை நிறுத்தி 10 ஆண்டுகள்ஆகிறது. இதனால் மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள், எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதையடுத்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் நேற்று காலை முத்தூரில் இருந்து மங்களபட்டி, நாட்ராயன்கோவில், சத்திபாளையம், கே.வி.பழனிசாமி நகர், ஒத்தக்கடை வழியாக வெள்ளகோவிலுக்கு அரசு டவுன் பஸ் சேவை தொடங்கியது, இதனால் நேற்று காலை சத்திபாளையம் மற்றும் கே.வி.பழனிச்சாமி நகர் பகுதியில் பொதுமக்கள் திரளாக நின்று பஸ்சுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.