மல்லூரில் மரங்கள் வெட்டுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மல்லூரில் மரங்கள் வெட்டுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-06 23:55 GMT
சேலம்:
மல்லூர் பேரூராட்சியில் மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும் சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகி ஞானவேல், நிர்வாகிகள் ரஞ்சித்குமார், தமிழரசன், பழனிசாமி உள்பட நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 
பின்னர் அவர்கள், மல்லூர் பேரூராட்சியில் மரங்களை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மரங்களை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்