ஆலங்குடி:
ஆலங்குடி அருகே ஆண்டிகுளம் பகுதியில் சட்டவிேராதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது விற்ற சிக்கப்பட்டியை சேர்ந்த மாணிக்கத்தை(வயது 48) சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் பிடித்து விசாரித்தார். மேலும் இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணிக்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.