ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-06 21:26 GMT
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கான செனட் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எனினும் ஆசிரியர் பிரிவுக்கான சிண்டிகேட் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த தேர்தலை நடத்தக்கோரி, கல்லூரி ஆசிரியர் சங்கமான ‘மூட்டா’ அமைப்பினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘மூட்டா’ அமைப்பு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நேற்று காலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்திற்கு சென்று, தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிண்டிகேட் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அவர்களிடம், பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, பதிவாளர் மருதுகுட்டி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிண்டிகேட் தேர்தல் குறித்து வருகிற 9-ந்தேதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்