கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-05-06 20:15 GMT
கும்பகோணம்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாரங்கபாணி கோவில் 
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி  கோவில் உள்ளது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.  இந்த ஆண்டு சித்திரை  திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓலை சப்பரத்தில் வீதி உலா 
விழா நாட்களில் காலை- இரவு நேரங்களில் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா  நடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி மற்றும் தாயார் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்