தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

Update: 2022-05-06 20:02 GMT
நிழற்குடை வேண்டும்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி பஸ் நிறுத்தத்தில் பட்டுக்கோட்டை செல்லும் பயணிகளுக்கு நிழற்குடை இல்லை. இதனால் பஸ் பயணிகள் வெயிலிலும், மழையிலும் ஒதுங்குவதற்கு இடவசதி இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அபூபக்கர், அதிராம்பட்டினம்.

மேலும் செய்திகள்