வெவ்வேறு சம்பவங்களில் வங்கி உதவியாளரின் மனைவி உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் வங்கி உதவியாளரின் மனைவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-05-06 19:49 GMT
துவரங்குறிச்சி, மே.7-
வெவ்வேறு சம்பவங்களில் வங்கி உதவியாளரின் மனைவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வங்கி உதவியாளரின் மனைவி
மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஒரு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எத்திராஜம்பாள் (வயது 20). இவர்களுக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகிறது. 10 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த எத்திராஜம்பாள்  தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிதீவைத்துக்கொண்டார். இதைபார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இறந்தார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்விசிறியில்...
திருச்சி, சுப்பிரமணியபுரம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் பிரான்சிஸ் (55). இவருக்கு திருமணமாகி துளசி மேரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையாகி இருந்த லாரன்ஸ் பிரான்சிஸ் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
கோவையை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). திருச்சி அரியமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து இருந்த அவர் அங்கு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்