3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-05-06 19:36 GMT
விருதுநகர், 
சிவகாசி அருகே சேனையாபுரம் காலனியை சேர்ந்த அரவிந்தன் (வயது28) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் 10 பேரை கைது செய்தனர். இதில் அருண்பாண்டியன் (31), பார்த்திபன் (32), மாரீஸ்வரன் (26) ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் மேகநாதரெட்டி  அருண் பாண்டியன் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் மேற்படி 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்