தாமரைக்குளம்
அரியலூர் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரே குடிசைமாற்று வாரியம் உள்ளது. இந்த குடிசைமாற்று வாரியம் எதிரே உள்ள வீட்டில் வஜ்ஜிர்கான் மகன் யாசின்(வயது 45) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் வீட்டினுள் பார்த்ததில் அங்கு யாசின் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அரியலூர் நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.