நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் எழுதினர்.

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் எழுதினர்.

Update: 2022-05-06 18:20 GMT
வெளிப்பாளையம்:
நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் எழுதினர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 4 ஆயிரத்து 266 மாணவர்களும், 4 ஆயிரத்து 303 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 569 பேர் எழுதினர். 118 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர். 261 மாணவர்களும், 155 மாணவிகளும் என மொத்தம் 416 பேர் தேர்வு எழுதவரவில்லை. 
95.03 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்
எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்காக  மாவட்டத்தில் 41 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 95.03 சதவீதம் பேர் எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி,கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. 
நாகை மாவட்டத்தில் பொதுத்தேர்வுகள் பணியில் தலைமையாசிரியர்கள் பணி நிலையில் 84 பேரும், ஆசிரியர்கள் பணி நிலையில் ஆயிரத்து 200 பேரும், அலுவலக பணியாளர்கள் நிலையில் 320 பேரும், 110 போலீசார் என மொத்தம் ஆயிரத்து 714 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.
பறக்கும் படை
தேர்வு பணிகளை கண்காணிக்க 50 நிலையான படைகளும், 20 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. மேலும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறைக்குள்  செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்