பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு
பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருடுபோனது.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் வசிப்பவர் மதியரசன் (வயது 30). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து மதியரசன் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.