எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 21,813 மாணவ-மாணவிகள் எழுதினர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. 21,813 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்.

Update: 2022-05-06 17:52 GMT
கள்ளக்குறிச்சி, 
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு  வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்கள், திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்கள், உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்தில் 24 தேர்வு மையங்கள் என கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 88 தேர்வு மையங்களில் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் உள்பட 23 ஆயிரத்து 88 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த தேர்வை 21 ஆயிரத்து 813 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 1275 பேர் தேர்வு எழுத வரவில்லை. பறக்கும் படை அதிகாரிகளும், நிலை படை அலுவலர்களுக்கும் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று மாணவர்கள் யாராவது காப்பி அடித்து எழுதுகிறார்களா? என கண்காணித்தனர். 

மேலும் செய்திகள்