கோடை வெயிலுக்கு மத்தியில் குலசேகரம் பகுதியில் சாரல் மழை
கோடை வெயிலுக்கு மத்தியில் குலசேகரம் பகுதியில் சாரல் மழை ெபய்தது.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட பொதுமக்கள் குளிர்ச்சியான பானங்களை அதிகமாக அருந்தி வருகின்றனர். இதனால் இளநீர், நொங்கு, சர்பத், மோர் போன்றவை அதிகமாக விற்பனையாகி வருகின்றன. மேலும் பழங்களின் விலைகளும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மார்த்தாண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை ெபய்தது. இதுபோல் நேற்று அதிகாலையில் குலசேகரம், திற்பரப்பு, சிற்றாறு அணைப் பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் அதிகாலை மற்றும் காலை நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்டது.