தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-06 17:22 GMT

புதிய கட்டிடம் கட்டப்படுமா?


சுல்தான்பேட்டை வட்டாரத் தோட்டக்கலைத் துறை அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்போதும் வேண்டுமானாலும் முழுமையாக இடிந்துவிழும் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அச்சமடைந்துள்ளனர். எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


  பழனி, சுல்தான்பேட்டை.

  

ரோட்டில் மதுபாட்டில்கள்


  கோவை குனியமுத்தூர் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்கு தினமும் ஏராளாமான மதுபிரியர்கள் வருகிறார்கள். இவர்கள் மது அருந்திவிட்டு அந்தப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் படுத்துக்கிடகிறார்கள். குறிப்பாக மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கிறார்கள். இதனால் ரோட்டில் மதுபாட்டில்கள் கிடப்பதால் பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கிறது. மேலும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மதுபிரியர்கள் அட்டகாசம் செய்கிறாாகள். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அட்டகாசம் செய்து மதுபிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்களா?

  அக்பர், கோவை.

  

  

  குவிந்து கிடக்கும் குப்பைகள் 

  கோவை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட 46-வது வார்டு ரத்தினபுரி கணினி வரி வசூல் மையம் அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இதேபோல் பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் அங்கு சுற்றுச்சூழல் மாசு அடையும் நிலை ஏற்படுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அங்கிருந்து அகற்ற ஆவன செய்வார்களா?

  பவித்ரா, ரத்தினபுரி.

  

  பஸ் இயக்கப்படுமா?

  கோவைப்புதூர்-துடியலூர் வழித்தடத்தில் 4ேஜ டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டதோடு, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வெவ்வேறு பஸ்களில் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரேஷ், கோவைப்புதூர்.

  

  வீணாகும் குடிநீர்

  கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட இருட்டுப்பள்ளம் மெயின் ரோடு அருகே குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாய் மூலம் சிறுவாணி அணை தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. இதன்காரணமாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் ரோட்டில் தண்ணீர் செல்வதால் சாலையும் பழுதைடைய வாய்ப்பு உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

  சண்முகராஜ், இருட்டுப்பள்ளம்.

  

  தெருவிளக்கு வசதி வேண்டும்

  கோவை-சத்தி ரோட்டில் ஓரைக்கால்பாளையம் உள்ளது. இந்தப்பகுதியில போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். மேலும் இருட்டை பயன்படுத்தி வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இதேபோல் வாகன ஓட்டிகளும் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். அதனால் ஓரைக்கால்பாளையம் பகுதியில் தெருவிளக்கு வசதி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் முன் வருவார்களா?.

  கார்த்திக், ஓரைக்கால்பாளையம்.

  

  உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?

  அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப்பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அதனால் அடிப்படை வசதிகளை செய்வதோடு, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கல்யாணி பாப்பாத்தி, அன்னூர்.

  

  

  வீடுகளுக்கு மின் இணைப்பு

  சூலூர் அருகே கண்ணம்பாளையம் தனலட்சுமி நகரில் 25 ஆண்டுகளளாக 75 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் திருட்டு சம்பவங்கள் நடக்கிறது. மேலும் இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதோடு, தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  லோகநாதன், சூலூர்.

  

  

  சாக்கடையில் அடைப்பு

  கோவை பாப்பநாயக்கன்பாளையம் 46-வது வார்டு பேரா வீதியில் சாலை சந்திப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாக்கடையில் செடி-கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாததால் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ெகாசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுந்தரம், பாப்பநாயக்கன்பாளையம்.

  

  

  

  

  

  

  

  

  

  

மேலும் செய்திகள்