விஷம் கொடுத்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

ராமநாதபுரம் அருகே குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-05-06 17:14 GMT
நயினார்கோவில்,
ராமநாதபுரம் அருகே குழந்தையை விஷம் ெகாடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
குழந்தை-தாய்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியனுக்கு உட்பட்ட பல்லவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முனீசுவரன். இவருடைய மனைவி திவ்யா (வயது 23). 
 இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுடைய 8 மாத பெண் குழந்தை தர்ஷினி. 
முனீசுவரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் குழந்தை தர்ஷினி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
கணவருக்கு கடிதம்
இதனால் திவ்யா மனவருத்தம் அடைந்தார். இதையடுத்து கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு தன் குழந்தையை தூக்கி சென்று உள்ளார். 
அங்கு  ஒரு கொட்டகையில் முதலில் தனது மகள் தர்ஷினிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
பிறகு சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடியில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய முனீசுவரன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இல்லாததால் தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அங்கு மனைவியும் 8 மாத குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
தகவல் அறிந்து நயினார்கோவில் போலீசார் விரைந்து வந்து திவ்யா மற்றும் குழந்தை தர்ஷினி உடல்களை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்