தமிழ் வினாக்கள் எளிதாக இருந்தது

தமிழ் வினாக்கள் எளிதாக இருந்தது

Update: 2022-05-06 17:07 GMT
போடிப்பட்டி:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.முதலாவதாக மொழிப்பாடத்தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ் வினாத்தாள் எதிர்பார்த்ததை விட மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-
எளிமையாக இருந்தது
ராஜேந்திரா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதித்யா:
தமிழ் பாடத்தில் அறிவிக்கப்பட்ட பாடத் திட்டத்துக்குள் எளிமையாக கேட்கப்பட்ட கேள்விகள் என்பதால் நன்றாக பதிலளிக்க முடிந்தது.எதிர்பார்த்ததை விட எளிதாக இருந்ததால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவி அனுஷ்கா:
1 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் கேள்விகள் மிக எளிதாக இருந்தது.சுயமாக சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகளும் எளிதாகவே கேட்கப்பட்டிருந்தது.முதல் பொதுத்தேர்வை சிறப்பாக எழுதியிருப்பது இனி வரும் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான மன தைரியத்தை அதிகரித்திருக்கிறது.
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அர்வின்:
தமிழ் தேர்வில் பொதுத்தேர்வுகளுக்கு முன் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே பெரும்பாலும் கேட்கப்பட்டிருந்தது.இதனால் நன்றாக எழுத முடிந்தது.மிகவும் எளிதாகவே இருந்தது.
அதிக மதிப்பெண் கிடைக்கும்
எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி மாணவி தீபா:
நன்றாக படித்தோம்.நன்றாக எழுதினோம் என்று மட்டும் சொல்ல முடியாது.தமிழ் பாடத்தில் கேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தது படித்ததை நன்றாக எழுத உதவியது.நிச்சயமாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

மேலும் செய்திகள்