விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவர் ‘திடீர்’ சாவு
விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது ஆழ்கடலில் குமரி மீனவர் ‘திடீர்’ சாவு
நாகர்கோவில்,
நித்திரவிளை அருகே உள்ள கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 45), மீனவர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சில மீனவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்துறை பகுதியை சேர்ந்த சுனில் என்பவரின் விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சம்பவத்தன்று கர்நாடகா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஷாஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதற்காக அவர் மருந்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஷாஜியின் உடலை சக மீனவர்கள் நேற்று முன்தினம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.