தடுப்புவேலி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

தடுப்புவேலி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2022-05-06 16:59 GMT
கொடைரோடு

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சரத்குமார் (வயது 27). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பெயிண்டு கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆக வில்லை.. 
நேற்று சரத்குமார் மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து மதுரையில் உள்ள அக்காள் ராஜலட்சுமி வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து இன்று மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தார். 
அம்மையநாயக்கனூர் அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள தடுப்புவேலி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சரத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரத்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்