காரிமங்கலம் ஊருக்குள் வந்து செல்லாத 6 பஸ்கள் மீது வழக்குப்பதிவு
காரிமங்கலம் ஊருக்குள் வந்து செல்லாத 6 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
காரிமங்கலம்:-
காரிமங்கலம் ஊருக்குள் வந்து செல்லாத 6 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
காரிமங்கலம் ஊருக்குள்...
கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி செல்லும் அரசு, தனியார் பஸ்கள் அகரம் பிரிவு ரோடு, சர்வீஸ் ரோடு, மொரப்பூர் மேம்பாலம், மீண்டும் சர்வீஸ் ரோடு பஸ் ஸ்டாண்ட் கடை வீதி, ராமசாமி கோவில் வழியாக தர்மபுரி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தர்மபுரியில் இருந்து வரும் பஸ்கள் ராமசாமி கோவில் கடைவீதி பஸ் ஸ்டாண்ட் வழியாக கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வரும் பஸ்கள் அகரம் பிரிவு ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு காரிமங்கலம் ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக தர்மபுரி நோக்கி செல்வதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
3 பஸ்கள் மீது நடவடிக்கை
இந்த புகாரின்பேரில் கலெக்டர் திவ்யதர்சினி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் அதிகாரிகள் காரிமங்கலம் பைபாஸ் ரோடு கெரகோடஹள்ளி பிரிவு ரோடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காரிமங்கலம் ஊருக்கு செல்லாமல் பைபாஸ் வழியாக சென்ற 6 தனியார் பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊருக்குள் செல்லாமல் பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுப்பதுடன் சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் எனவும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.