கிணத்துக்கடவு அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு
கிணத்துக்கடவு அருகே டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர் திருட்டு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோதவாடிபிரிவில் இருந்து கோதவாடி செல்லும் வழியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதனை சரிசெய்ய தாமரைக்குளம் மின் ஊழியர்கள் வந்து பார்த்தனர். அப்போது டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பரை மட்டும் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாமரைக்குளம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம் உதவி செயற்பொறியாளர் சித்ராயுவராணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்மரில் காப்பர் ஒயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.