கோவை வனக்கோட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது
கோவை வனக்கோட்டத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது
கோவை
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, பெரியநாயக் கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளை யம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், காட்டுயானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இதில், அனைத்து வனச்சரகங்களிலும் சிறுத்தை, காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மேலும் வனப் பகுதியில் தண்ணீர். உணவு போன்றவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புலிகள் நடமாடி வருவதை வனத்துறையினர் நேரில் பார்த்து உள்ளனர்.
புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது வன ஆர்வலர்கள் மத்தியில மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது
கோவை வனக்கோட்டத்தில் கோவை வனச்சரகத்தை தவிர்த்து மற்ற அனைத்து வனச்சரகங்களிலும் புலிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை வனச்சரக பகுதியில் மட்டும் 10-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் புலிகள் இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 15-க்கும் மேல் உயர்ந்து உள்ளது.
இதற்கு காரணம் புலிகளுக்கு தேவையான அளவு உணவு கிடைப்பதுதான். குறிப்பாக வனப்பகுதியில் போதிய அளவுக்கு மழை பெய்து உள்ளது.
இதனால் புள்ளிமான், கடமான்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த மான்களை தான் புலிகள் விரும்பி சாப்பிடும். வனப்பகுதிக்குள் தேவையான அளவுக்கு உணவு கிடைப்பதால் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
புலி குட்டி போடும்போது ஓரிரு குட்டிகள் போதிய உணவு கிடைக்காமல் உயிரிழந்து விடும்.
ஆனால் தற்போது அது போன்ற நிலை இல்லை. உணவு தாராளமாக கிடைப்பதால் எந்த குட்டிக ளும் உயிரிழப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை வனக்கோட்ட பகுதியில் ஒரே இடத்தில் 3 புலிகள் இருந்து உள்ளதை சிலர் பார்த்து உள்ளனர்.
புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிறுத்தைகளை துரத்தி விடுகிறது. எனவே சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.