கோவில்பட்டியில் எல்.ஐ.சி.ஊழியர் சங்க மாநாடு

கோவில்பட்டியில் எல்.ஐ.சி.ஊழியர் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-05-06 12:41 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள தனியார் மகாலில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க கோட்ட மாநாட்டை யொட்டி கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்திற்கு தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் ஆர். சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர். முருகன், துணை செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் நெல்லை கோட்ட தலைவர் சி. முத்துக்குமாரசாமி கலந்துகொண்டு பங்கு விற்பனை சூழலில் எல்.ஐ.சி.யின் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசினார்.
கூட்டத்தில் நகரசபை கவுன்சிலர் கே. சீனிவாசன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் மோகன்தாஸ், முன்னாள் கோட்ட தலைவர் தேவப் பிரகாசம், மாவட்ட இணைச் செயலாளர் உமாதேவி, செயலாளர்கள் குருவராஜ், குழந்தைவேலு, தலைவர் நடராஜன் ஆகியோர் பேசினா். கிளைச் செயலாளர் ஸ்டாலின் அசோக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்