2 நாட்களாக அடக்கம் செய்யாமல் வைக்கப்பட்ட மூதாட்டியின் உடல்
2 நாட்களாக மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யாமல் வைக்கப்பட்டடிருந்தது.
மணப்பாறை:
மணப்பாறையை அடுத்த சின்னாக்கோன் களத்துப்பட்டியை சேர்ந்த நல்லம்மாள்(வயது 90) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல தயாராக இருந்த நிலையில் சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை. இதனால் மூதாட்டியின் உடல் 2 நாட்களாக அடக்கம் செய்யப்படாத நிலையில் இருந்தது. இது பற்றி தகவலறிந்த மருங்காபுரி வருவாய்த்துறையினர் மற்றும் புத்தாநத்தம் போலீசார் அங்கு வந்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுடுகாட்டிற்கு செல்வதற்கான நிரந்தர பாதை இருந்தால் மட்டுமே உடலை எடுத்துச் செல்வோம் என்று செல்லம்மாளின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் உடலை அடக்கம் செய்துவிட்டு, பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் போராட்டம் நீடித்தது. பின்னர் மூதாட்டியின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.