கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-05 23:27 GMT
மலைக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த அமல்ராஜின் மகன் தனசாம்ரிஷி(வயது 18). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்