திருச்சி கோர்ட்டில் சரணடைந்த 2 பேர் சிறையில் அடைப்பு

திருச்சி கோர்ட்டில் சரணடைந்த 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2022-05-05 23:26 GMT
திருச்சி:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவர் கடந்த 28-ந்தேதி மதுரை ஒத்தக்கடை அருகே வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மதுரை மாவட்டம் சிட்டக்கூர் புதுதாமரைப்பட்டியை சேர்ந்த அருண்பாண்டியன்(30), அவருடைய நண்பர் தவித்தான்(42) ஆகிய 2 பேர் திருச்சி ஜே.எம்.1 கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு, அவர்களை 18-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்