ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிக்கும் பணி
ஆத்தூரில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் இடிக்கும் பணி நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் கடைவீதியில் இருந்து கோட்டை, முல்லைவாடி, வடக்குகாடு, சந்திரகிரி, கல்லாநத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வசிஷ்ட நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலம் அகலம் குறைவாகவும், சேதமடைந்து இருந்ததால் பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டும் பணிக்கு ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழைய பாலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. பாலத்தின் கிழக்கு பகுதியில் வசிஷ்ட நதியின் குறுக்கே தற்காலிகமாக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.