கந்தம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி சாவு

கந்தம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2022-05-05 22:06 GMT
அன்னதானப்பட்டி:
சேலம் கந்தம்பட்டி பைபாஸ், மூலப்பிள்ளையார் கோவில், வண்டிக்காரன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் அளவுக்கதிகமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து விட்டார். இதில் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்