டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் டாஸ்மாக் குடோன் வளாகத்தில், தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர் சம்மேளனம் மற்றும் டாஸ்மாக் குடோன் சுமை பணி தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் மது பெட்டிகளை லாரியில் ஏற்றுவதற்கு ஒரு பெட்டிக்கு ரூ.3.50 வழங்க வேண்டும். சென்னை அம்பத்தூர் குடோனுக்கு வழங்கி உள்ளது போல் மதுபாட்டில் பெட்டிகளை லாரிகளில் ஏற்றி-இறக்க வசதியாக அனைத்து குடோன்களுக்கும் டிராலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.