சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு: பெங்களூருவில் போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒரு போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-05-05 20:55 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தேர்வை பெங்களூரு விவேக்நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் கரிபசவனகவுடா என்பவரும் எழுதியிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியான பின்பு கரிபசவனகவுடா அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார்.

 இதையடுத்து போலீஸ்காரரான அவர், சப்-இன்ஸ்பெக்டர் உடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் போலீஸ்காரர் கரிபசவனகவுடா நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேட்டில் கரிபசவனகவுடாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் போலீஸ் விதிமுறைகளை மீறி சப்-இன்ஸ்பெக்டர் உடையணிந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அந்த போட்டோவை அவர் வெளியிட்டதாகவும் தெரிகிறது. இதனால் கரிபசவனகவுடா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கரிபசவனகவுடாவிடம் விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்