பெண் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி: தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெண் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-05 20:28 GMT
நெல்லை:
நெல்லை சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் கடந்த 23-ந் தேதி நெல்லையை அடுத்த பழவூர் உச்சினிமாகாளி அம்மன் கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பழவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்ற படையப்பா (40) முன்விரோதம் காரணமாக மார்க்ரெட் தெரசாவை கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்ல முயன்றார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் அதனை ஏற்று ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார், ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்