சிறுமி 5 மாத கர்ப்பம்; 2 முதியவர்களின் கொடூரம்

மதுரையில் பாலியல் பலாத்காரத்தால் சிறுமி 5 மாத கர்ப்பமானார்.

Update: 2022-05-05 20:06 GMT
மதுரை, 

மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 60), பாலமுருகன் (60). இவர்கள் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. எனவே குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுெதாடர்பாக ரமேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ரமேசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்