பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
பூ வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
கபிஸ்தலம்
கபிஸ்தலம் அருகே உள்ள கண்டகரையம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 42). இவரது மனைவி தனலட்சுமி. விவசாய கூலி தொழிலாளி. கருணாகரன் சைக்கிளில் சென்று பூ வியாபாரம் செய்து வந்தார். சைக்கிளில் செல்ல சிரமமாக இருந்ததால் வியாபாரத்திற்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு மனைவியிடம் கருணாகரன் கேட்டாராம். அதற்கு தனலட்சுமி, குழு கடன் முடிந்தவுடன் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இதனால், விரக்தி அடைந்த கருணாகரன் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாகரன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து, கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.