உலகம்பட்டியில் மீன்பிடி திருவிழா

உலகம்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-05-05 19:26 GMT
எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள மேல்புளியக் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிகாலை முதலே ஊத்தா, தூரி, கச்சா, வலை ஆகியவற்றுடன் கண்மாயை சுற்றிலும் திரண்டனர். இந்த நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் கொடி அசைத்ததை தொடர்ந்து கண்மாயில் இறங்கி ஆர்வமுடன் மீன்களை அள்ளினர். இதில் கெண்டை, கெளுத்தி, அயிரை, கட்லா, ஜிலேபி வகை மீன்களை பிடித்தனர். மேலும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்