தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-

Update: 2022-05-05 18:35 GMT
ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் ரேஷன்கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அரும்பூர், குளிச்சார், பரசலூர், துண்டுக்கட்டளை-கோவிலடி, திடீர் நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த கடைக்கு நிரந்தர விற்பனையாளர் இல்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடை திறக்கப்படுகிறது. அப்படியே திறந்தாலும் அரைநாள் மட்டுமே இயங்குகிறது. அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே பொதுமக்கள்நலன் கருதி ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் தாமதமின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                                                                  -பொதுமக்கள், மயிலாடுதுறை.

மேலும் செய்திகள்