பஸ் மோதி கொத்தனார் சாவு

பஸ் மோதி கொத்தனார் உயிரிழந்தார்.

Update: 2022-05-05 18:30 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே உள்ள சத்திரம்புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 34). கொத்தனார். இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். காரியாபட்டி அருகே எஸ்.கல்லுப்பட்டி விலக்கு பகுதியை கடக்கும்போது திருச்செந்தூரிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்