வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-05-05 18:08 GMT
கரூர்
கிருஷ்ணராயபுரம்.
லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 28). இவர் 8 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் தாய் கொடுத்த புகாரின்பேரில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, அறிவானந்தத்தை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து அறிவானந்தத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அறிவானந்த்திடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை குளித்தலை மகளிர் போலீசார் வழங்கினார். இதையடுத்து ஏற்கனவே சிறையில் உள்ள அறிவானந்தம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மேலும் செய்திகள்