கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவிடகம் கிராமத்தில் நீர் வரத்து கால்வாயை சிலர் ஆக்கிரமித்து தென்னை, தைல மரங்கள் வளர்த்து வந்தனர். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பு செய்து வளர்க்கப்பட்ட மரங்களை அகற்றும் பணி நடைபெற்றது.
வருவாய் ஆய்வாளர் வீரராகவன் தலைமையில் பொதுப்பணித்துறை பாசன உதவியாளர் ஜெகன் தங்கவேல், கிராம அதிகாரி சுகுமார் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் மரங்களை அகற்றினர்.