கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ராஜபாளையம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 20 பேர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் குடும்பத்துடன் தங்கி கரும்பு வெட்டும் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பண்ருட்டி அருகே உள்ள வடக்குபாளையம் கிராமத்தை சேர்ந்த அருள் (வயது 40) என்பவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி அருளை தேடினர்.
2 நாட்களாக தேடிய நிலையில் அருள் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து போன அருளுக்கு மனைவி மற்றும் 4 பெண்குழந்தைகள் உள்ளனர்.