சிவகாசி,
திருத்தங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வடமலாபுரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பாலம் அருகில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். விசாரணையில் அவர் திருத்தங்கலை சேர்ந்த கார்த்திக் என்கிற பேட்டை கார்த்திக் (வயது 28) என்பதும், 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.