நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது

வந்தவாசி அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது

Update: 2022-05-05 17:28 GMT
வந்தவாசி

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தவாசி சாலை வழியாக இரவில் வந்து கொண்டிருந்தது. 

அந்த லாரியை டிரைவர் சந்தோஷ் என்பவர் ஓட்டினார்.

வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராம கூட்டுச்சாலை அருகே வந்தபோது, லாரியில் திடீரென டீசல் தீர்ந்தது. அப்போது டிரைவர் சந்தோஷ் லாரியை நிறுத்தி விட்டு ஹேண்ட் பிரேக் போடாமல்  டீசல் வாங்குவதற்காக அருகில் சென்று விட்டார். 

இயக்கத்தில் இருந்த லாரி தானாகவே ஓடி சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் அப்பகுதியில் எதிரே எந்த ஒரு வாகனங்களும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து சந்தோஷ் டீசல் வாங்கி கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர், பொன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்