கடத்தூர்:-
கடத்தூர் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், பக்தர்கள் அலகு குத்தி சாமி வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர். நேற்று ஊர் பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஏராளமானவர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு துர்வாசர் துருவபங்கம் அங்காளம்மன் பிறப்புஎன்னும் புராண நாடகம்நடக்கிறது.