திருக்கோவிலூரில் இயற்கை விவசாயிகளின் உணவு திருவிழா

திருக்கோவிலூரில் இயற்கை விவசாயிகளின் உணவு திருவிழா நடந்தது.

Update: 2022-05-05 17:13 GMT
திருக்கோவிலூர், 
திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடொப்பனசெய் அறக்கட்டளை அமைப்பின் சார்பில் இயற்கை விவசாயிகளின் உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் தொழிலதிபர் டி.கே.டி. முரளி, நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபிகிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதிர்வேல் வரவேற்றார். விழாவை திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா குத்து விளக்கேற்றினார். முன்னதாக மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இதில் தஞ்சாவூர் சித்தர் ஆசிரமம் நிறுவன தலைவர் சித்தர், சேலம், உயிர்மெய், சுய வாழ்வியல் மகத்துவம் அமைப்பை சேர்ந்த ஷிவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கண்காட்சியில் ஏராளமான உணவு வகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதில் முன்னோடி இயற்கை விவசாயிகள் ராஜேந்திரன், அருள்மொழி, நகராட்சி கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராஜா, டி.பூபதி, கே.ரவிக்குமார், தமிழ்வாணி அருள்பிரகாஷ், ஜெயந்தி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாலமுருகன் தொகுத்து வழங்கினார். முடிவில் ஆர். கார்த்திகேயன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்