மின்னல் தாக்கி விவசாயி பலி

வந்தவாசி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

Update: 2022-05-05 16:46 GMT
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மணிமங்கலம் மதுரா மேலந்தாங்கல் கிராமம் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 85), விவசாயி. 

இவர் நிலத்தில் ஓலையில் கொட்டகை கட்டி அதில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். 

சம்பவத்தன்று சூறாவளி காற்று வீசியதால் மாடு கட்டுவதற்காக சென்றார். அப்போது காற்று  இடி, மின்னலுடன் மழை பெய்ததால் அங்குள்ள மரத்தின் கீழ் நின்றார். திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்