சிங்காநல்லூரில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியை மேயர் ஆய்வு செய்தார்

சிங்காநல்லூரில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியை மேயர் ஆய்வு செய்தார்

Update: 2022-05-05 15:47 GMT

கோவை

சிங்காநல்லூரில் பில்லூர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியை மேயர் ஆய்வு செய்தார்.

குடிநீர் வினியோகம்

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் வினியோக  இடைவெளி அதிகரித்து உள்ளது. 

பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 

இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகி றார்கள். பில்லூரில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், கோவை அருகே கரட்டுமேடு என்ற இடத்தில் சரவணம் பட்டி, குறிச்சி, மதுக்கரை ஆகிய பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப் படுகிறது. 

பிரதான குழாயில் உடைப்பு

இதில், குறிச்சி, மதுக்கரை பகுதிகளுக்கு சிங்காநல்லூர் வழியாக பில்லூர் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. வரதராஜபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக திடீரென்று உடைந்தது. இதனால் தண்ணீர் வெளியேறி சாலையில் ஓடியது.

இது குறித்து தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கள் மற்றும் மாநகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீர் திறந்து விடுவது உடனே நிறுத்தப்பட்டது. 

மேயர் ஆய்வு

இதையடுத்து குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு குழாயில் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

 இதை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் குழாய் உடைப்பை விரைவில் சரிசெய்ய அதி காரிகளுக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து அந்த பணி விரைவுபடுத்தப்பட்டது. 

குழாய் உடைப்பு காரணமாக குறிச்சி, மதுக்கரை பகுதிகளில் 2-வது நாளாக நேற்று குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இன்று (நேற்று) இரவுக்குள் பணி முடிவடைந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்