ஆனைமலை வனப்பகுதியில் இனச்சேர்க்கைக்காக இரவில் கூடும் மின்மினிப்பூச்சிகள் ஒளியை உமிழும் அதிசய நிகழ்வு நடக்கிறது
ஆனைமலை வனப்பகுதியில் இனச்சேர்க்கைக்காக இரவில் கூடும் மின்மினிப்பூச்சிகள் ஒளியை உமிழும் அதிசய நிகழ்வு நடக்கிறது
கோவை
ஆனைமலை வனப்பகுதியில் இனச்சேர்க்கைக்காக இரவில் கூடும் மின்மினிப்பூச்சிகள் ஒளியை உமிழும் அதிசய நிகழ்வு நடக்கிறது.
மின்மினிப்பூச்சிகள்
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வரகளியாறு உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன.
இங்கு தற்போது பெரிய அளவிலான மின்மினிப்பூச்சிகள் கூட்டம், கூட்டமாக பறந்து திரிகின்றன.
அவை இரவில் கூடி ஒளியை உமிழும் போது அந்த பகுதியே மின்விளக்குகளால் அலங்கரித்தது போல் காட்சி அளிக்கிறது. அதை பார்த்து வனக் குழுவினர் அதிசயித்தனர்.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் எம்.ஜி.கணேசன் கூறியதாவது
அதிசய நிகழ்வு
மின்மினிப் பூச்சிகளின் இனச்சேர்க்கை காலத்தில் வனப்பகுதியில் மின் விளக்கு போட்டது போன்ற அதிசய நிகழ்வு நடைபெறு கிறது.
இது வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் தொடக் கம் வரை நிகழும். எண்ணிலடங்கா மின்மினிப் பூச்சிகள் இனச் சேர்க்கைக்கு தங்களின் துணையை தேர்ந்தெடுப்பதற்கும், இசை வை தெரிவிக்கும் வகையிலும் ஒளியை வெளியிடுகின்றன.
இந்த நிகழ்வு வனப்பகுதியில் உள்ள 3 குன்றுகளில் குறைந்தது 14 கிலோ மீட்டர் நீளம் வரை பரவி உள்ளது.
கடந்த அமாவாசை நாளில் இது உச்சத்தை எட்டியது. இருள் சூழ்ந்த நிலையில் மின் மினி பூச்சிகள் உமிழும் ஒளியால் வனப்பகுதியே மின்விளக்கால் அலங்கரித்தது போல் ஒளிர்கின்றன.
ஆரோக்கிய வனச்சூழல்
இது போன்ற நிகழ்வு கேரளாவில் நெல்லியம்பதி, பரம்பிக்குளத் தில் நடக்கிறது. ஆனாலும் ஆனைமலை புலிகள் காப்பக பகுதி யில் அதிக எண்ணிக்கையில் மின்மினி பூச்சிகள் உள்ளன.
எனவே அவை வெளியிடும் ஒளி, மிகவும் அழகிய காட்சியாக இருக்கிறது.
இது வனப்பகுதியில் சுற்றுச்சூழல் ஆரோக்கியமானதாகவும், நன்கு பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கிறது என்பதை உணர்த்து கிறது.
பல்வேறு வடிவங்களில் ஒளியை உமிழும் பூச்சிகளின் மிகப்பெரிய கூட்டத்தை கண்டு நாங்கள் மெய்சிலிர்த்தோம்.
ஒளி உருவாக்கம்
ஒரு மரத்தில் விளக்கு அணையும் போது, மற்ற மரங்களில் தொடங்கி சுழற்சியில் ஒளி செல்கிறது.
அவதார் படத்தில் நாம் பார்த்த பண்டோரா உலகத்தை போலவே இது தோன்றியது.
மின்மினிப் பூச்சிகள் தங்கள் வயிற்றில் ஒளியை உருவாக்கும் அர்ப்பணிக்கப்பட்ட உறுப்புகளை கொண்டுள்ளன.
இது ஆக்சிஜனை உட்கொள்வதன் மூலம் லூசிபெரின் என்ற பொருளுடன் இணைந்து ஒளியை உருவாக்குகிறது.
2 ஆயிரம் இனங்கள்
உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த மின்மினிப் பூச்சிகள் உள்ளன. ஆனால் அவற்றில் ஒரு சில மட்டுமே ஒத்திசைவான ஒளியை உருவாக்க கூடியவை.
இந்த மின்மினிப் பூச்சிகளின் சூழலியல், வாழ்க்கைசுழற்சி, மரங்களை தேர்ந்தெடுப்பது மற்றும் பிற வனவிலங்குகளுடனான உறவு ஆகியவை தொடர்பாக விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுடன் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.